எரிபொருள் விலை மற்றும் மின்சார கட்டணத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள யோசனை

283 0
எரிபொருள் விலை மற்றும் மின்சார கட்டணத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு யோசனை தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தூதுக்குழுவின் தலைவர் ஜாவோ லீயை (Jaewoo Lee ) இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.
இலங்கைக்கு கடந்த 18 ஆம் திகதி பயணம் மேற்கொண்டிருந்த சர்வதேச நாணய நிதியத்தின் குழு நேற்று தமது பயணத்தை நிறைவுசெய்துக்கொண்டது.
இதன்போது மூன்று வருடக்கால ஊழியர் சேமலாபநிதியத்தின் பொருளாதார நிகழ்ச்சித்திட்டம் உட்பட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.
இதன் தொடர் கலந்துரையாடல் எதிர்வரும் ஒக்டோபரில் நியூயோர்க்கில் நடத்தப்படவுள்ளது.
அரசாங்கத்தின் நிதி முகாமைத்துவம் மற்றும் அரசாங்கத்துக்கு சொந்தமான வர்த்தக நடவடிக்கைகளின் மறுசீரமைப்பு மேற்கொள்ளவேண்டிய அவசியம் உள்ளதை தாம் கண்டறிந்தாக சர்வதேச நாணய நிதிய குழு தெரிவித்துள்ள

Leave a comment