எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் ஒரு நாள் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக துணை மருத்துவ சேவைகள் தொழிற்சங்க கூட்டு ஒன்றியம் தெரிவித்துள்ளது.
பதவி உயர்வு உள்ளிட்ட சில முக்கிய விடயங்களை முன்வைத்து இந்த ஒரு நாள் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அதன் தலைவர் அஜித் பீ திலக்கரட்ண எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்துள்ளார்.