கடந்த வாரம் புதிதாக வாங்கிய தனது அடுக்குமாடி குடியிருப்பை பார்வையிட்டுவிட்டு வீடு திரும்புவதற்காக ஜெய்ப்பூர் வீதியில் பேருந்துக்காக காத்துக்கொண்டு இருந்த 28 வயது இளம் பெண்ணை காரில் வந்த இரண்டு இளைஞர்கள் கடத்திச் சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து பொலிஸாரிடம்; அந்த பெண் கூறும்போது, மர்ம நபர்கள் அவரை காரில் கடத்திச் செல்லும்போதே அவர்கள் இருவரும் பலமுறை அவரை பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறினார்.
மேலும் ராஜஸ்தானின் புறநகர் பகுதியில் இருக்கும் அரசு மின்சாரவாரிய பகுதிக்கு அழைத்துச் சென்று வேறு ஆறு பேர் கொண்ட கும்பலை வரவழைத்துள்ளனர்.
பின்னர் அவர்களும் அந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.
பின்னர் அங்கிருந்து வேறு ஒரு கிராமத்திற்கு அந்த பெண்ணை கொண்டு சென்று இரண்டு நாட்கள் அங்கு வைத்து பல முறை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.
கிட்டத்தட்ட 23 பேர் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக பாதிக்கப்பட்ட பெண், காவலர்களிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர் தன்னை எந்த இடத்திலிருந்து கடத்திச் சென்றார்களோ அந்த இடத்திற்கே செப்டம்பர் 26ம் திகதி அதிகாலை 4:30 மணியளவில் திரும்ப கொண்டுவந்து விட்டதாக அந்த பெண் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.