தேசிய தமிழ் தின விழா யாழ் இந்து கல்லூரியில்

477 0
தேசிய தமிழ் தின விழா எதிர்வரும் 14ம், 15ம் திகதிகளில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் இடம்பெறவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை, மத்திய மாகாண தமிழ் சாஹித்திய விழா எதிர்வரும் ஒக்டோபர் 7ஆம் மற்றும் 8 ஆம் திகதிகளில் நுவரெலிய சினிசிட்டா அரங்கில் நடைபெறவுள்ளதாக மத்திய மாகாண தமிழ்க்கல்வி அமைச்சர் எம் ராமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Leave a comment