எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி உலக சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு மிருகக்காட்சி சாலைகள் மற்றும் பூங்காக்களுக்கும் பாடசாலை மாணவர்கள் இலவசமாக செல்ல கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
60 வயதிற்கு மேற்பட்ட முதியோருக்கும் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக பேண்தகு அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் பிரதியமைச்சர் சுமேதா ஜீ.ஜயசேன தெரிவித்துள்ளார்.
இதன்படி தெஹிவளை மிருகக்காட்சி சாலை, பின்னவலை தேசிய சரணாலயம் மற்றும் பின்னவலை யானைகள் சரணாயலத்தையும் இலவசமாக பார்வையிட முடியும்.
மேலும் அன்றைய தினம் பேராதனை தாவரவியல் பூங்கா, ஹக்கலை தேசிய பூங்கா மற்றும் ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவில உலர் தவரவியல் பூங்கா ஆகியவற்றையும் பாடசாலை மாணவர்கள் மற்றும் முதியோருக்கும் இலவசமாக பார்வையிட முடியும்.