நாவலபிட்டி மற்றும் பத்தனை காவல்துறை பிரிவிற்குட்பட்ட குயின்ஸ்பெரி தேயிலை தோட்டத்தில், நாவலபிட்டி – தலவாகலை பிரதான வீதியில் கொலப்பத்தனை பிரதேசத்தில் இன்று பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளவர் குயின்ஸ்பெரி தோட்டம் – கொலப்பத்தனை பிரதேசத்தினை சேர்ந்த 58 வயதான பெண்ணொருவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.
6 பிள்ளைகளின் தாயாரான இவர் இன்று காலை விறகு தேடச் செல்வதாக கூறி வீட்டில் இருந்து சென்றதாக உறவினர் ஒருவர் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.
சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை நாவலபிட்டி மருத்துவமனையில் இடம்பெறவுள்ளது.
நாவலபிட்டிய மற்றும் பத்தனை காவல்துறை ஊடாக சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.