கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவு மூவாயிரம் ரூபாவிலிருந்து ஐயாயிரம் ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளது.
இது தொடர்பிலான அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இம்முறை கல்வியியல் கல்லூரிகளுக்கு நான்காயிரத்து 800 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கல்வியியல் கல்லூரிகளுக்கு புதிதாக மாணவர்கள் சேர்த்துக்கொள்ளல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஒக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.