புலமைப் பரிசில் பரீட்சார்த்திகளின் கவனத்துக்கு

358 0

படம்004நாளை 21ஆம் திகதி, ஞாயிற்றுக்கிமையன்று நடைபெறவிருக்கின்ற 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கின்ற பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைகள் திணைக்களம் விசேட ஆலோசனைகளை வழங்கியுள்ளன.

இது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எம்.என்.ஜே. புஷ்பகுமார விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புலமைபரிசில் பரீட்சைக்கான முதலாவது வினாத்தாளுக்கான பரீட்சை காலை 9.30 இலிருந்து 10.15 வரைக்குமான 45 நிமிடங்களை கொண்டிருக்கும்.

இரண்டாம் வினாத்தாள் முற்பகல் 10.45 மணிமுதல் நண்பகல் 12 மணி வரைக்குமான 1 மணிநேரம் 15 நிமிடங்களை கொண்டிருக்கும். ஆகவே, பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகள் பரீட்சை மண்டபகங்களுக்கு காலை 9 மணிக்கு முன்னரே சமூகமளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.