தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்களை தாவரவியல் பூங்காக்களாக மாற்றவேண்டிய அவசியம் இல்லை என வடமாகாணசபை உறுப்பினர் இம்மனுவேல் ஆனோல்ட் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அழிக்கப்பட்டிருக்கும் மாவீரர் துயிலும் இல்லங்கள் புனரமைப்பு செய்யப்பட்டு மாவீரர் துயிலும் இல்லங்களாகவே அவை பராமரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
வடமாகாணசபையின் 106 வது அமர்வு நேற்றைய தினம் பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.இதன்போது, யாழ்ப்பாணம் தொண்டமனாறு கடற்கரையை சுற்றுலா தலமாக மாற்றவேண்டாம் என நடத்தப்படும் போராட்டம் தொடர்பில் விவாதம் இடம்பெற்றது.
இந்த விவாத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த மாகாணசபை உறுப்பினர் இம்மானுவேல் ஆனோல்ட், மாவீரர் துயிலும் இல்லங்களை தாவரவியல் பூங்காக்களாக மாற்றியமைக்க வேண்டும் என அண்மையில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எனினும் மாவீரர் துயிலும் இல்லங்களை தாவரவியல் பூங்காக்களாக மாற்றவேண்டிய தேவை இல்லை. அவை மாவீரர் துயிலும் இல்லங்களாகவே காணப்படட்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.