கைது செய்யப்பட்டுள்ள மியன்மார் அகதிகளில் பாடசாலை மாணவர்கள் ஆறுபேர் காணப்படுவதாகவும், அவர்களுக்கு கல்வி பெறுவதற்கு வசதி செய்து கொடுக்குமாறும் இலங்கை ஆசிரியர் சங்கம் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இப்பிள்ளைகளின் கல்விக்கு தடங்கள் ஏற்படாதவாறு அவர்களைத் தங்க வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மேலும் அரசாங்கத்தைக் கோரியுள்ளார்.