GPS முறை ஊடாக புகையிரத திணைக்களத்தின் கொழும்பு, அனுராதபுரம், நாவலப்பிட்டிய புகையிரத நிலையங்களை இணைத்தல், தானியக்க புகையிரத நேர அட்டவணைகளை அமைத்தல், புகையிரத நடவடிக்கை தொடர்பில் அறிக்கைகளை அமைத்தல், புகையிரத தாமத கண்காணிப்பு திட்டத்தை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பொதுமக்கள் புகையிரதம் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வதை GPS முறை மூலம் விரிவு படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
31.8 மில்லியன் ரூபாவிற்கு குறித்த GPS முறையினை பெற்றுக்கொள்வது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல்சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது