2020ம் ஆண்டில் புகையிலை மற்றும் அதனூடாக தயாரிக்கப்படும் பொருட்களின் உற்பத்திகளை நிறுத்துவதற்கு தீர்மானம் ஒண்டு கொண்டுவரப்பட்டுள்ளதாக சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
புகையிலை உற்பத்தி மூலம் 35000 குடும்பங்கள் வாழ்க்கையை கொண்டு செல்வதாகவும் அவர்களுக்கு வேறொரு உற்பத்தி மூலம் பொருளாதார உதவி செய்துகொடுக்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும்
அமைச்சர் மேலும்தெரிவித்துள்ளார்.
புகையிலை தடுப்பு தொடர்பான உலக சுகாதார அமைப்பின் 5 வருட திட்டம் நேற்று சுகாதார அமைச்சின் கேட்போர்கூடத்தின் ஆரம்பித்து வைக்கப்பட்ட வேளையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த திட்டத்திற்காக பிரித்தானிய அரசின் மூலம் 15 மில்லியன் பவுன்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் இலங்கை உட்பட மேலும் 15 நாடுகள் இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.