சட்ட விரோதமான முறையில் புதையல் அகழ்வை மேற்கொண்ட சந்தேகநபர்கள் இருவர், மத்துகம், போபிட்டிய பிரதேசத்தில் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவலையடுத்து, புதையல் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட இடம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. சுமார் 250 கிராம் நிறையுடைய வெடிபொருள் மற்றும் புதையல் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயதங்கள் கைப்பற்றப்பட்டதுடன் தொடங்கொட , மத்துகம பிரதேசங்களைச் சேர்ந்த சந்தேகநபரகள் இருவர் கைதுசெய்யப்பட்டனர்.
சந்தேகநபர்களை மத்துகம நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்செய்யவுள்ளதாக பொலிஸார் கூறினர்.