கிளிநொச்சி மாவட்ட பொருளாதார மையம் திறப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல்

390 0

கிளிநொச்சி மாவட்ட பொருளாதார மையம் திறப்பது தொடர்பில் இன்றைய தினம் அமைச்சர் கரிசன் தலமையில் மாவட்டச் செயலகத்தில் ஓர் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக  மாவட்டச் செயலாளர் சு.அருமைநாயகம் தெரிவித்தார்.

இது தொடர்பில் மாவட்டச் செயலாளர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,

கிளிநொச்சி மாவட்ட பொருளாதார மையம் திறப்பது தொடர்பில் இன்றைய தினம் அமைச்சர் கரிசன் தலமையில் மாவட்டச் செயலகத்தில் ஓர் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. அதாவது கிளிநொச்சி மாவட்ட பொருளாதார மையம் எதிர்வரும்  ஒக்டோபர் 14ம் திகதி திறப்பதற்கு அமைச்சரால்  உத்தேசிக்கப்பட்டு  சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில்  கிளிநொச்சி மாவட்டத்தில் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் நீண்டகாலமாக திறக்கப்படாத நிலையில் உள்ள பொருளாதார மையத்தினை திறப்பதற்கு பெரும் முயற்சியினை மேற்கொண்டோம். அதன் பிரகாரம் குறித்த விடயம் தற்போது நிறைவேறியுள்ளது.

அந்தவகையில்   குறித்த நிலையத்தில்     தற்போது தற்போது 40 வர்த்தக கூடம் உள்ளது. இதில் 28  கூடங்கள் கிளிநொச்சி வர்த்தகர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை இங்கே வழங்கிய வர்த்தக நிலையங்களிற்கும் 3 ஆயிரத்து 500 ரூபா முதல் வாடகை அறவீடு இடம்பெறும் .

இவற்றின் அடிப்படையில் உள்ளூர் வர்தகர்கள் பிற மாவட்ட வர்த்தகர்களிற்கும் அதேபோல் தென்னிலங்கை வர்தகர்களிற்கும் தமது பொருட்களை சந்தைப்படுத்துப் வாய்ப்போடு பிற மாவட்டப் பொருட்களையும் இலகுவிலும் நிறைவாகவும் பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேநேரம் குறித்த நிலையத்திறப்புடன் மாவட்டத்தில் நீண்டகாலமாக அமைப்புப்படியில் தாமதமடையும் சர்வதேச தர விளையாட்டு மைதானம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குறித்த விளையாட்டரங்கின் அனைத்துப் பணிகளும் நிறைவுற்றபோதும் வாகனத் தரிப்பிடப் பணிகள் மட்டுமே நிறைவு செய்யப்பட வேண்டிய நிலையில் உள்ளது. என்றார்.-

Leave a comment