ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கலந்துகொள்ளும் தேசிய தமிழ்த்தின விழா ஒக்டோபர் 14ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடாத்துவதற்கான முன்னோடிக் கலந்துரையாடல் மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தலமையில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இடம்பெறவுள்ள குறித்த நிகழ்வு தொடர்பில் நேற்று மாவட்டச் செயலகத்தில் விசேட கலந்துரையாடல் இடல்பெற்றது. இதில் கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன் , நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் , மற்றும் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் , வட மாகாண ஆளுநரின் செயலாளர் , படை அதிகாரிகள் , பிரதேச செயலாளர்கள், பொலிசார் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த கலந்துரையாடலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கலந்துகொள்ளும் தேசிய தமிழ்த்தின விழா ஒக்டோபர் 14ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் , அதற்கான தேவைகள் , பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றுடன் நிகழ்வுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. தொடர்ச்சியாக 3 தினங்கள் இடம்பெறும் குறித்த தேசிய தமிழ்த் தினவிழாவின் ஆரம்பநிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொள்வதோடு ஏனைய இரு நாட்களும் கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டது.
குறித்த கலை நிகழ்வுகளை வட மாகாண கல்வி அமைச்சுகடன் கலை , கலாச்சார அமைச்சின் திணைக்களங்களும் இணைந்து முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.