இலங்கையில் புகையிலை சார்ந்த பொருட்களின் பாவனையை கட்டுப்படுத்த பிரித்தானியா நிதி உதவி 

71418 0

இலங்கையில் புகையிலை சார்ந்த பொருட்களின் பாவனையை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்துக்கு பிரித்தானியா நிதி உதவி வழங்கவுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக இந்த நிதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த மற்றும் நடுத்தர வர்க்க நாடுகளில், புகையிலை சார்ந்த பொருட்களின் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கான, உலக சுகாதார ஸ்தாபனத்தினால் நெறிப்படுத்தப்பட்டுள்ள புதிய வேலைத்திட்டம் ஒன்றின் ஊடாக இந்த நிதிவழங்கல் இடம்பெறவு;ளது.

இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள 15 நாடுகளில் இலங்கையும் உள்ளடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரையான 5 ஆண்டு கால வேலைத்திட்டமாக இது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்காக பிரித்தானியா 20 மில்லியன் டொலர்களை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment