றக்பி வீரர் வசீம் தாஜூதீன் கொலை செய்யப்பட்ட தினத்தில் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து நாரஹேன்பிட்டி காவல்நிலைய பொறுப்பதிகாரி மற்றும் மேலும் பல நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் தெரியவந்துள்ளது.
சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி மன்றாடியார் நாயகம் ஜெனரல் டிலான் ரத்நாயக்க இன்று கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் இதனை தெரிவித்துள்ளார்.
இதன் ஊடாக விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவித்த அவர், இதன்படி கொலை தொடர்பில் இதுவரை அறியப்படாத சந்தேக நபர்கள் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விசாரணை தொடர்பான முனேற்ற அறிக்கையை நவம்பர் மாதம் 8 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கில் சில தொலைபேசி அழைப்புக்களின் தரவுகள் அழிக்கப்பட்டிருந்தமை இதற்கு முன்னர் தெரியவந்திருந்தது.
எனினும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவற்றை மீள பெற்று கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.