பாடப்புத்தகங்களுக்கு வவுச்சர் முறை – ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு

8217 26

பாடப்புத்தகங்களுக்காக எதிர்காலத்தில் வவுச்சர் முறைமை ஒன்றை அமுலாக்க கல்வி அமைச்சு முன்வைத்துள்ள யோசனைக்கு ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இவ்வாறான முறையின் ஊடாக பாடசாலை கல்வி நடவடிக்கைகளில் பல பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

பாடப்புத்தகங்களுக்காக எதிர்காலத்தில் வவுச்சர் முறைமை ஒன்றை அமுலாக்க கல்வி அமைச்சு எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் அகில விராஜ்காரியவசம், கல்வி அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

எனினும் இந்த யோசனையை ஒருபோதும் நடைமுறையில் நடைமுறைப்படுத்த முடியாது என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

Leave a comment