ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கான மகிழ்ச்சிகர செய்தி

404 0

தேசிய கல்வியற் கல்லூரிகளில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கான மாதாந்த உணவு கொடுப்பனபை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.

அதன்படி, பயிற்சி காலத்தில் உணவு கொடுப்பனவாக வழங்கப்படும் 3 ஆயிரத்து 500 ரூபாய் தொகை 5 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படவுள்ளது.

இந்த கொடுப்பனவு பயிற்சிக் காலப்பகுதியின் மூன்று வருடங்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் ,19 தேசிய கல்வியற் கல்லூரிகளில் 12 ஆயிரத்து 558 மாணவர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment