இந்த நாட்டில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்ற எந்தவொரு அரசாங்கமும் ஒரிரு நாட்களில், 24 மணி நேரத்தில் அல்லது சில மாதங்களில் மாற்றங்களை கொண்டுவரவில்லையெனவும், அரசாங்கமொன்றின் மாற்றங்களைக் காண்பதற்கு குறிப்பிடத்தக்க கால அவகாசம் தேவை எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இன்று (27) பதுளையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில், ஜனாதிபதி இதனைக் கூறினார்.
அரசாங்கம் ஒன்றாக இருந்து நாட்டுக்குத் தேவையான அபிவிருத்திப் பணிகளை நாம் வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றோம். எமக்கு சர்வதேச அங்கீகாரம் ஒன்று உள்ளது. சர்வதேசம் எங்களில் நம்பிக்கை வைத்துள்ளது. நாட்டின் அரசியல் ஸ்தீரத்தன்மை உள்ளது. அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மூலத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளமை நிரூபிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் நிரந்தர சமாதானம் ஒன்றை ஏற்படுத்த தேசிய நல்லிணக்கம் அவசியம். இதற்காக நாம் அனைவரும் ஒற்றுமையாக ஒன்றுபட வேண்டும் எனவும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.