படுகொலை செய்யப்பட்ட புங்குடுத்தீவு மாணவி வித்தியா கொலை வழக்கு தொடர்பில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்கு மலையக மக்கள் நீதிக்கு தலை வணங்கி பாராட்டுகின்றனர்.
கொலை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து வழங்கிய செய்தியை கேட்டு பூரிப்பு அடைந்த மலையக மக்கள் இந்த நாட்டில் இவ்வாறான இழிவான செயலில் ஈடுபட நினைக்கும் நபர்களுக்கு ஒரு பாடமாக அமைந்து விட்டதாகவும், இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளுக்கு சிரம் தாழ்த்தி நன்றி தெரிவிப்பதாகவும் மலையக மக்கள் தெரிவிக்கின்றனர்.