சமாதானத்துக்கான நோபல் பரிசுக்கு ஜனாதிபதியின் பெயர் பரிந்துரை

312 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயர், 2017ஆம் ஆண்டின் சமாதானத்துக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஒஸ்லோவில் இயங்கிவரும் சமாதான ஆராய்ச்சி நிலையமே ஜனாதிபதியின் பெயரைப் பரிந்துரை செய்துள்ளது.

2002ஆம் ஆண்டு முதல், நோபல் பரிசுகளின் சமாதானத்துக்கான பரிசைப் பெறுபவர்களின் பெயர்களை இந்த நிறுவனமே பரிந்துரை செய்து வருகிறது.

அதன்படி, 2017ஆம் ஆண்டுக்கான சமாதானத்துக்கான நோபல் பரிசுக்கு ஐந்து பேரின் பெயர்களை இந்நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது. அவற்றுள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரையும் அது உள்ளடக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இலங்கையில் இனக் குழுக்களுக்கும் மக்களுக்கும் இடையிலான சமாதானத்தை ஏற்படுத்த முயற்சித்து வரும் அவரது சேவையை அடிப்படையாகக் கொண்டே அவரது பெயரைப் பரிந்துரைத்திருப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

ஜனாதிபதியின் பெயருடன் அமெரிக்க சிவில் விடுதலைக்கான அமைப்பைச் சேர்ந்த சூஸன் என்.ஹேர்மன், மேற்கு ஆப்பிரிக்க மாகாணங்களின் பொருளாதாரத்துக்கான அமைப்பு, சிரிய சிவில் பாதுகாப்பு அமைப்பான ‘வைட் ஹெல்மட்’ அமைப்பைச் சேர்ந்த ரயீத் அல் சாலே மற்றும் கொங்கோவில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்காக மறுவாழ்வு உதவிகளைச் செய்துவரும் ஜீன் நெக்கச்சே பன்யரே, ஜீனட் கஹிந்தோ பிந்து மற்றும் டொக்டர் டெனிஸ் முக்வேஜ் ஆகியோரின் பெயர்களை மேற்படி நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.

Leave a comment