வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலை வைத்தியர்களின் குற்றச்சாட்டுக்கள் CIDயிற்கு

321 0

வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலை வைத்தியர்களினால் சுகாதார அமைச்சிடம் வழங்கப்பட்டுள்ள 26 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய கடிதம் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினர் மூலம் விசாரணை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபரிடம் சுகாதார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் சுகாதார சேவைத் திணைக்களத்தின் மூலமும் விசாரணைகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த விசாரணைக்காக ஓய்வு பெற்ற சிரேஷ்ட நிர்வாக அதிகாரி லயனல் பெர்னாண்டோ மற்றும் சிரேஷ்ட உதவி செயலாளர் ரோஹன டீ சில்வா ஆகியோர் நியமிக்கப்படவுள்ளனர்.

வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையின் இரகசியங்களை வெளியிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்து எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் நிபந்தனைகளுடன் கூடிய அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு சுகாதார செயலாளர் ஜனக சுகததாச குறித்த விசாரணைக் குழுவுக்கு அறிவித்துள்ளார்.

Leave a comment