இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் மீதான வரியை 100வீதமாக அதிகரிக்குமாறு நிதி அமைச்சுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.
கடந்த சில காலமாக வெங்காய இறக்குமதி அதிகரித்து காணப்படுவதால் உள்நாட்டு வெங்காய உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
உள்நாட்டு விவசாயிகளின் பாதிப்பை இல்லாதொழிக்க இறகுமதிச் செய்யப்படும் வெங்காயம் மீதான வரிமை 100 வீதமாக அதிகரிக்குமாறு ஜனாதிபதி நிதி அமைச்சுக்கு அறிவித்துள்ளார்.
அடுத்து மாதம் முதல் இந்த வரிவிதிப்பு அமுலுக்கு வரும் என்று நிதி அமைச்சின் வட்டாரங்களில் அறிய முடிகிறது.