ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான அச்சுறுத்தல் – மங்கள

326 0

மியன்மார் – ரோஹிங்கியா முஸ்லிம்கள் தங்கவைக்கப்பட்டுள்ள கல்கிஸ்ஸை வீட்டை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்த முட்பட்டமைக்கு நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர கண்டனம் வெளியிட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் மங்கள சமரவீர தனது ட்விட்டர் பக்கத்திலேயே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

மியன்மாரில் தமக்கு எதிராக அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதால் அங்கிருந்து வெளியேறி, கடல்மார்க்கமாக வந்த பெண்கள், சிறுவர்கள் உட்பட 32 ரோஹிங்யா முஸ்லிம்கள் இலங்கையில் தஞ்சமடைந்தனர்.

குறித்த 32 பேரும் ஐ.நாவின் அகதிகளுக்கான ஆணையகம் பொறுப்பேற்று, கல்கிஸ்ஸையிலுள்ள வீடொன்றில் தற்காலிகமாக தங்கவைத்திருந்தது. சில அரசசார்பற்ற அமைப்புகளும் இதற்கு உதவியிருந்தன.

இவர்களை இலங்கை அரசு பொறுப்பேற்ககூடாது என கடும்போக்குடைய இனவாத அமைப்புகள் வலியுறுத்திவந்தன.

இந்நிலையில் தஞ்சமடைந்துள்ள முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் எனவும் அவர்களை நாட்டில் தஞ்சமடைய அனுமதித்தால் நாட்டில் பேராபத்து ஏற்பட்டுவிடும் எனவும் கூறி அவர்களை மிரட்டி தாக்குதல் நடத்த முட்பட்டிருந்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு பொலிஸார் விரைந்தனர்.

பதற்ற நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக ரோஹிங்யா முஸ்லிம்களை மிரிஹான பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். குறித்த சம்பவம் தொடர்பிலேயே விரைவான விசாரணை நடத்த வேண்டும்“ என அமைச்சர் மங்கள் கோரியுள்ளார்

Leave a comment