16000 குடும்பங்களுக்கு நீர் வழங்கும் பதுளை தேமோதர நீர் திட்டம் இன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நீர் திட்டத்திற்கு இலங்கை அரசு மற்றும் அமெரிக்க அரசின் கடன் உதவியுடன் 11880 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது.
இதேவேளை பதுளை சேனாநாயக்க மைதானத்தில் அமைக்கப்பட்ட புதிய வாகனத் தரிப்பிடமும் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது.
இதற்காக ஊவா மாகாண சபை மூலம் 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்ததுடன் சுமார் 200 வாகனங்கள் தரித்து நிற்க கூடியதாக குறித்த தரிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஊவா மாகாண சபையின் நிறுவனங்களுக்கு முகாமைத்துவ உதவியாளர்களை நியமிக்கும் திட்டத்தில் 320 நியமனங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.