அரசாங்க நிர்வாக சேவை வினாத்தாள் கசியவில்லை – பரீட்சைகள் ஆணையாளர்

302 0

அரசாங்க நிர்வாக சேவை தரம் மூன்று ஆட்சேர்ப்புக்கான போட்டி பரீட்சையின் வினாத்தாள் முன்கூட்டியே கசியவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தான் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணை அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னர் பரீட்சாத்திகளுக்கு அநீதி ஏற்படாதவாறு அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க நிர்வாக சேவை ஆட்சேர்ப்புக்கான போட்டி பரீட்சையில் 5 வினாத்தாள்கள் உள்ளன.

இதில் ஒரு வினாத்தாளில் உள்ள வினாக்கள் மேலும் ஒரு வினாத்தாளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய கல்வி அமைச்சரால் இது தொடர்பில் விசாரணை செய்யுமாறு பரீட்சைகள் திணைக்களத்திற்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

Leave a comment