முள்ளிவாய்க்கால் மேற்கு வளர்மதி கடற்தொழில் கூட்டுறவு சங்கத்தினர் தங்களுடைய பூர்வீக இறங்கு துறையாக பாவித்து வந்த இடங்களை படையினர் கைப்பற்றியுள்ளார்கள்.
2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் மக்களின் தொழில் செய்யும் இறங்கு துறைகள் அனைத்தும் படையினர் வசம் இருந்துள்ளது அதன்பின்னர் மக்கள் போராடிய நிலையில் 50 மீற்றர் தூரமான கரையோர பகுதியினை விடுவித்துள்ளார்கள்.
50 மீற்றர் தூரத்தில் 50 கடற்தொழிலாளர்களின் படகுகள் எவ்வாறு தரித்து நிற்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்கள் அத்துடன் இவர்களின் பிரச்சனை தொடர்பில் வடமாகாண சபைஉறுப்பினர் து.ரவிகரன் அவர்களுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளதுடன் நேற்று ரவிகரன் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று நேரடியாக பார்வையிட்டுள்ளார்.
இதுதொடர்பில் அவர் மாகாணசபை அமர்பில் முதலமைச்சரிடம் இந்த மக்களின் கோரிக்கையினை கொண்டுசெல்லவுள்ளதாகவும் ஒருங்கிணைப்பு குழுகூட்டத்திலும் இந்த மக்களுக்காக வாதாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்கள்.