அண்மையில் கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்ற தமிழரான ட்ராவிஸ் சின்னையா விரைவில் ஓய்வு பெறப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறிலங்கா கடற்படையின் 21ஆவது கடற்படைத் தளபதியாக விளங்கும் ட்ராவிஸ் சின்னையா இந்த மாதத்துடன் ஓய்வு பெற்றால் மிகக் குறுகிய காலம் கடற்படைத் தளபதியாக பதவிவகித்தவர் பட்டியலில் அடங்குவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கடற்படைத் தளபதி ட்ராவிஸ் சின்னையா நேற்று தனது 55ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
இவரின் பதவிக் காலத்தை ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன விரும்பினால் அதிகரிக்கமுடியும். ஆனால், மேலும் ஒரு மாதகால பதவி நீடிப்பே மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார்.
கடந்த ஓகஸ்ட் மாதம் 21ஆம் நாள் ட்ராவிஸ் சின்னையா கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார்.
இவர், ஓய்வுபெற்றுக்கொண்டால், இவருக்கு அடுத்ததாக கடற்படையின் உயரிய அதிகாரியான அநுராதபுரத்தைச் சேர்ந்த ரியர் அட்மிரால் சிரிமெவன் சரத்சந்திர ரணசிங்கஇ சேவை மூப்பு அடிப்படையில் கடற்படைத் தளபதி பதவியை பெற்றுக்கொள்ளக்கூடிய தகுதியைக் கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.