சமையல் எரிவாயுவின் விலை உயர்வடைந்துள்ளமையால், சிற்றூண்டிச் சாலை உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலையையும் அதிகரிக்க வேண்டி ஏற்பட்டுள்ளதாக, அனைத்து இலங்கை சிற்றூண்டிசாலை உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, அப்பம் ஒன்றின் விலையை 15 ரூபாவாகவும், பிளேன்டி ஒன்றின் விலையை 20 ரூபாவாகவும் சோற்றுப் பொதி ஒன்றின் விலையை 130 ரூபாவாகவும் பால் தேநீர் ஒன்றின் விலையை 40 ரூபாவாகவும் அதிகரிக்கவுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை, நாட்டின் அத்தியவசிய பொருட்களுக்கான விலை துரிதமாக அதிகரித்துச் செல்வதால், அனைத்து இலங்கை சிற்றூண்டி சாலை கட்டமைப்புக்களும் பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும், அனைத்து இலங்கை சிற்றூண்டிசாலை உரிமையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
நேற்றையதினம் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு இழுத்து மூலம் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே, அச் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் மேற்கண்ட விடயங்களை கூறியுள்ளார்.