சயிட்டம் நிறுவனத்தினால் பொது மக்களின் நிதி துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறி, அது குறித்த தகவல்கள் அடங்கிய கடிதம் ஒன்று நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை அனைத்து இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் உடனடியாக சட்டத்தை நடைமுறைப்படுத்தி, உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, அமைச்சரிடம் கோரியுள்ளதாக, அச் சங்கத்தின் பிரதம செயலாளர் வைத்தியர் ஜெயந்த பண்டார சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், சயிட்டம் நிறுவனம் தற்போது சர்வதேசத்தினால் கூட நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தற்போது வரை சயிட்டம் நிறுவனத்தில் 1000க்கும் அதிக மாணவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, அவர்கள் மில்லியன் கணக்கில் குறித்த நிறுவனத்திற்கு வழங்கியுள்ளதாகவும், அது உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை எனவும், ஜெயந்த பண்டார குறிப்பிட்டுள்ளார்.