அரசியலமைப்புச் சபை ஒக்டோபர் 30ம் திகதி முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு கூடவுள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பை வௌியிடுவது தொடர்பிலான அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காகவே இவ்வாறு கூடவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு புதிய அரசியலமைப்பு தொடர்பிலான தனது நிலைப்பாட்டை வௌியிட்டுள்ளதோடு, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஏனைய கட்சிகளும் ஒரு நிலைப்பாட்டுக்கு வரவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பு மாநாகர சபையின் அனுசரணையுடன் 39 இந்துக் கோவில்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வு இன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.
இதன்போதே, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.