நிலவும் அதிக மழையுடனான காலநிலை காரணமாக மத்திய மலைநாட்டின் பிரதான வீதிகளில் தற்போது பனிமுகில் சூழ்ந்து காணப்படுவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
குறிப்பாக ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் கிதுல்கலையில் இருந்து ஹட்டன் வரையிலும்இ ஹட்டனில் இருந்து நுவரெலியா வரையிலும் இவ்வாறு பனிமுகில் நிறைந்து காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் பொகவந்தலாவைஇ நோட்டன்பிரிஜ் மற்றும் கினிகத்தேன உள்ளிட்ட வீதிகளிலும் அதிக அளவில் பனிமுகில் சூழ்ந்துள்ளது.
இதன் காரணமாக வாகன போக்குவரத்தின் போது சாரதிகள் அதிக அவதானத்துடன் செல்லுமாறு காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளைஇ நிலவும் மழையுடனான காரணமாக குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் வான் கதவு ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக புளத்சிங்களஇ அகலவத்தைஇ முதுராவல இங்கிரிய உள்ளிட்ட தாழ் நிலப்பகுதிகளின் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதேநேரம்இ கடும் மழை காரணமாக இரத்தினபுரி களுத்துறை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் கொழும்பு வார்ட் ப்ளேஸ் பகுதியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளது.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.