மாத்தறை – வெலிகம – தேனிபிட்டிய பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் இன்று அதிகாலை கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
முகத்தை மறைத்துக் கொண்டு உந்துருளியில் பிரவேசித்த மூன்றுபேர்இ பணியாளர்களை ஆயுதமுனையில் அச்சுறுத்தி பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
கொள்ளையிடப்பட்ட பணத்தில் அளவு இன்னும் இதுவரையில் தெரியவரவில்லை என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இரண்டு நாட்களுக்குள் மாத்தறை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் மூன்றாவது கொள்ளைச் சம்பவம் இதுவாகும்.
நேற்றைய தினம் அகுரஸ்ஸ மற்றும் கம்புறுபிட்டிய பிரதேசங்களில் இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இவ்வாறு உந்துருளிகளில் வந்தவர்களால் கொள்ளை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.