படகுகளை மீட்டுச் செல்வதற்காக இந்தியகடற்றொழிலாளர்கள் குழு இலங்கை வரவுள்ளது

472 0

இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களின் படகுகளை மீட்டுச் செல்வதற்காக இந்தியகடற்றொழிலாளர்கள் குழு ஒன்று நாளை இலங்கை வரவுள்ளது.

இந்திய ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

கடந்த 2015ம் ஆண்டு எல்லைத்தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டமைக்காக பறிமுதல் செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 42 படகுகள் அண்மையில் விடுவிக்கப்பட்டன.

இதனை கடந்த மாதம் இலங்கை வந்த இந்திய கடற்றொழிலாளர்கள் குழு ஒன்று ஆய்வு செய்ததில் 36 படகுகள் மாத்திரமே பயன்படுத்தக்கூடிய தரத்தில் இருப்பதாக தெரிவித்திருந்தது.

இதன்படி தற்போது குறித்த படகுகளை மீட்பதற்காக இந்திய குழுவினர் நாளையதினம் இலங்கை வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment