ஹம்பாந்தொட்டை துறைமுக பணியாளர்கள் ஒருநாள் அடையாள வேலைப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தங்களது தொழிலுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தி இந்த போராட்டம் இடம்பெறுகிறது.
இந்த பிரச்சினை தொடர்பில் தொழில் அமைச்சர் இன்று போராட்டத்தில் ஈடுபடுகின்றவர்களுடன் கலந்துரையாடல் நடத்தவுள்ளார்.
இன்று மாலை தொழில் அமைச்சின் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.