சீனாவுடனான உறவுகள் வலுப்பெற்றுள்ளன – இலங்கை

258 0

சீனாவுடனான உறவுகள் வலுப்பெற்றுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. இரு நாடுகளினதும் உயர்மட்ட அதிகாரிகள் பரஸ்பர பயணங்களை மேற்கொண்டுள்ளதாகவும் இதன் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் ஸ்திரமடைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

சீனாவுடனான வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், சீனா வழங்கி வரும் உதவிகள் வரவேற்கப்பட வேண்டியது என குறிப்பிட்டுள்ளதுடன் சீன சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

Leave a comment