திக்வெல்ல பொல்கஹமுல்ல பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திஸ்ஸமஹாராம பகுதியிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியொன்று முச்சக்கர வண்டியொன்றுடன் மோதியதாலேயே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.
குறித்த விபத்து ஏற்படும் வேளையில் முச்சக்கர வண்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் முச்சக்கர வண்டியின் சாரதியும் அதில் பயணித்த கர்ப்பிணித் தாய் ஒருவரும், 7 சிறுவர் ஒருவரும் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூன்று சிறுவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை தம்புள்ள – குருநாகல் பிரதான வீதியின் கலேவெல பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் மேலும் 12 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருநாகலையிலிருந்து கலேவெல நோக்கி பயணித்த கெப் வாகனம் ஒன்று வேன் ஒன்றுடன் மோதியதாலேயே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.