புதிய அரசியலமைப்பின் ஊடாக நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை – ரணில்

288 0

புதிய அரசியலமைப்பின் ஊடாக இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.
குறித்த செயற்பாட்டை புதிய அரசியல் அமைப்பில் அடிப்படை கூறுகளாக உள்வாங்க பிரதான காட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் பிரதமர் இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment