மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் பேச்சுவார்த்தை- பிரதமர்

254 0

மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

குறித்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்ட விதத்தில் சட்டவிதிகள் மீறப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கத்தினால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இதுதொடர்பில் மகிந்த அணியினர் நேற்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி இருந்தனர்.

இதற்கு பதில் வழங்கிய பிரதமர்இ இந்த விடயம் குறித்து சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment