மத்திய மாகாண கல்வி செயலாளர் இடமாற்றம்

328 0

மத்திய மாகாண கல்வி செயலாளராக கடமையாற்றிய பீ.பி.விஜயரத்ன ஊவா மாகாண பிரதான செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண பிரதான செயலாளர் சரத் பிரேமவன்க்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உலகின் மிக நீண்ட மணப்பெண் ஆடையை தயாரித்து கின்னஸ் சாதனை புரிவதற்காக பாடசாலை மாணவர்களை பயன்படுத்தியமை தொடர்பில் மத்திய மாகாண ஆளுநர் மூலம் மத்திய மாகாண கல்வி செயலாளர் பீ.பி.விஜயரத்ன மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இதேவேளை, ஜனாதிபதி செயலகத்தின் மூலம் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் மாகாண ஆளுநரின் செயலாளர் அலுவலகத்திற்கு அறிவிக்கப்படவில்லை எனவும் விசாரணைகளின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தற்போது எதுவும் கூற முடியாது எனவும் மத்திய மாகாண ஆளுநரின் செயலாளர் திஸ்ஸ கருணாரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment