எதிர்வரும் ஒக்டோபர் 6ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள தேசிய உணவு உற்பத்தி மறுமலர்ச்சி வாரத்தை, வெற்றிகரமாக நிறைவேற்ற அனைத்து மாவட்ட செயலாளர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மேலும், நிறுவன ரீதியிலான பொறுப்புக்களை வழங்கும் வகையிலான சுற்றுநிருபம் தற்போது வௌியிடப்பட்டுள்ளதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வௌியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
கடந்த ஒன்றரை வருடங்களாக நாட்டில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கடும் வரட்சி, வௌ்ள நிலைமைகள் காரணமாக, வீழ்ச்சியடைந்துள்ள விவசாயத்தில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தி, விவசாயிகளின் பொருளாதாரம் மற்றும் நாட்டின் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பொருட்டு இந்த வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்படுவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் குறிப்பிட்டுள்ளார்.