பாகிஸ்தான் உளவுத்துறை தீவிரவாதிகளை பாதுகாக்கிறது: கோர்ட்டில் சப்-இன்ஸ்பெக்டர் வழக்கு

474 0

பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.பி.யின் அதிகாரிகள் தீவிரவாதிகளை பாதுகாத்து வருகின்றன என்று கோர்ட்டில் சப்- இன்ஸ்பெக்டர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பாகிஸ்தான் தீவிரவாதிகளின் சொர்க்க புரியாக விளங்குகிறது. அங்கு தீவிரவாதிகள் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறார்கள் என்பன போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன.

அதை மெய்ப்பிக்கும் வகையில் பாகிஸ்தான் உளவுத்துறையில் பணிபுரியும் சப்-இன்ஸ்பெக்டர் முக்தார் அகமது ‌ஷசாத் இஸ்லா மாபாத் ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில் பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.பி.யின் அதிகாரிகள் தீவிரவாதிகளை பாதுகாத்து வருகின்றனர். சந்தேகப்படும் தீவிரவாத அமைப்புகள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுப்பதில்லை.

அவர்கள் உஸ்பெகிஸ்தான், ஈரான், சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளை சேர்ந்த தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்துள்ளனர். அதற்குரிய உறுதியான ஆதாரங்கள் உள்ளன. எனவே ஐ.எஸ்.ஐ. மூலம் ‘ஐ.பி.’ உளவுத்துறை மீது விசாரணை நடத்த உத்தர விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

புகார் மனுவில் உளவுத்துறையின் இணை இயக்குனர் ஜெனரல், இயக்குனர்கள் மற்றும் துணை இயக்குனர்கள் பெயர்களை தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து பிரதமரிடம் புகார் செய்தேன். நாட்டையும், மக்களையும் தீவிரவாதிகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன். ஆனால் எந்தவித பயனும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a comment