அதிக மழை காரணமாக நாட்டின் மூன்று மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நுவரெலியா, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் இந்த நிலைமை நிலவுவதாக அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவித்துள்ளது.
இந்தநிலையில் குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.
அதேநேரம் நாட்டில் மழையுடனான காலநிலை நிலவும் பகுதிகளில் தொடர்ந்தும் அந்த நிலைமை நிலவும் என்று காலநிலை அவதான நிலையத்தின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், யாழ்ப்பாணம் மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 75 முதல் 100 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அத்துடன் நாட்டை சூழவுள்ள கடற்பரப்பில் மணிக்கு 70 கிலோமீற்றர் என்ற வேகத்தில் இடைக்கிடையில் காற்று அதிகரித்து வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.