அடுத்த மாதம் 6ம் திகதி ஆரம்பமாகின்ற தேசிய உணவு உற்பத்தி புரட்சி வேலைத்திட்டத்தை வெற்றியடைய செய்வதற்கு அனைத்து மாவட்ட செயலாளர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி கோரியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
கடந்த ஒன்றரை வருடங்களில் நாட்டில் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு மற்றும் வறட்சி உள்ளிட்ட காரணங்களால் உணவு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் விவசாயத்தைப் பெருக்கி, விவசாயிகளினதும், நாட்டினதும் பொருளாதார வளத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த வேலைத்திட்டத்துக்கான சுற்றுநிரூபங்கள் சகல திணைக்களத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ஆனால் சுற்றுநிரூபத்துக்கு மாத்திரம் மட்டுப்படாமல், சமுக நோக்கில் தங்களது பொறுப்புகளை மாவட்ட செயலாளர்களும், அதிகாரிகளும் அர்ப்பணிப்புடன் நிறைவேற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.