பாடசாலை மாணவர்களை தனிப்பட்ட நிகழ்சிகளில் பங்குப்பெறச் செய்வதை தவிர்ப்பதன் மூலம் பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க முடியும்- எம்.ரமேஸ்வரன்

441 0

பாடசாலை மாணவர்களை தனிப்பட்ட நிகழ்சிகளில் பங்குப்பெறச் செய்வதை தவிர்ப்பதன் மூலம் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க முடியும் என்று மத்திய மாகாண கல்வி அமைச்சர் எம்.ரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஹட்டன் – கலனிவத்தையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

அண்மையில் கண்டியில் நீளமான சேலைத் தலைப்பைக் கொண்ட மணமகள் என்று கின்னஸ் சாதனையை படைப்பதற்கான முயற்சிக்காக, மாணவர்கள் பயன்படுத்தப்பட்டனர்.

இது தனிப்பட்ட ஒரு நிகழ்ச்சியாகும்.

இதில் மாணவர்களை பயன்படுத்தியதாலேயே தற்போது பெரும் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment