39 இந்து ஆலயங்களுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று நிதி உதவிகளை வழங்கியுள்ளார்.
அலரி மாளிகையில் நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் வைத்து இந்த நிதி உதவி வழங்கப்பட்டதாக,பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த வேலைத்திட்டத்துக்கு கொழும்பு மாநகர சபை அனுசரனை வழங்கியுள்ளது.
இந்த நிகழ்வில் இந்து கலாசார அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனும் உடனிருந்தார்.