தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பெருமளவானோரின் கவனத்தை ஈர்த்துள்ள புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளது.
இதனை முன்னிட்டு, யாழ்ப்பாண நீதிமன்ற கட்டத் தொகுதி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாண நீதிமன்ற கட்டித்தொகுதியின் 3ஆம் மாடியில் கூடும் நீதாய விசாரணை மன்றின் நீதிபதிகளான பாலேந்திரன் சசிமகேந்திரன், நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோரினால் திறந்த நீதிமன்றத்தில் வைத்து இந்த தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளது.
கடந்த ஜுன் மாதம் 28 ஆம் திகதி முதல் வித்தியா கொலை வழக்கு நீதாய விசாரணை மன்றின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
வழக்கினை பிரதி மன்றாடியார் நாயகம் குமார்ரட்ணம் மற்றும் நாகரட்ணம் நிஷாந், மாலினி விக்னேஸ்வரன் ஆகிய அரச சட்டவாதிகள் குழுவினர் நெறிப்படுத்தியிருந்தனர்.
3 மாதங்கள் நடைபெற்ற இந்த வழக்கின் நீதவாய விசாரணை மன்று விசாரணைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளது.
வித்தியாவின் படுகொலை வழக்கு தொடர்பான விசேட தொகுப்பினை இப்போது கேட்கலாம்