அரசாங்கத்தின் வசமுள்ள அனைத்து பாதுகாக்கப்பட்ட காணிகள் தொடர்பான தகவல்களும் இணையத்தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
இலங்கை நில அளவைத் திணைக்களத்தினால் இந்த வரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதனூடாக அரசாங்கத்தின் வசமுள்ள பாதுகாக்கப்பட்ட காணிகள் தொடர்பான தகவல்களை முதலீட்டாளர்களால் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த வரைபடம் இணையத்தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவிக்கிறது.
இலங்கை நில அளவைத் திணைக்கத்தின் இணையத்தளத்துக்கு பிரவேசிப்பதனூடாக இந்த வரைபடத்தை பெற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.