முன்னுரிமை ஒழுங்கைகளில் சாலை விதிகளை மீறும் சாரதிகளை இனங்காண சிவில் பாதுகாப்பு படை அதிகாரிகளை அனுப்பத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சாலை விதிகளை மீறும் சாரதிகளை அடையாளம் காண நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் மாதவ வைத்திய ரத்ன குறிப்பிட்டுள்ளார்.
முன்னுரிமை ஒழுங்கை சட்டம் தற்போது மூன்று கட்டங்கள் நிறைவடைந்துள்ளதாகவும், இதில் காலி வீதியில் சாலை விதிகள் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு வருவதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.
இதன் நான்காவது கட்டம் மருதானை மற்றும் பொரளை நகரை மையப்படுத்தி நவம்பர் மாதமளவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
மேலும், வருங்காலத்தில் முன்னுரிமை ஒழுங்கைகளுக்காக சொகுசு பஸ்களை பயன்படுத்தவுள்ளதாகவும் மாதவ வைத்திய ரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, வீதி போக்குவரத்து நெருக்கடிகளை குறைப்பதே முன்னுரிமை ஒழுங்கை திட்டத்தின் முக்கிய நோக்கம் எனவும், அவர் கூறியுள்ளார்.